Homeவிளையாட்டு284 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

284 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

காலியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் சொனால் தினுஷ 100 ஓட்டங்களை பெற்று, தனது கன்னிச் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார்.

அத்துடன் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Manav Suthar 04 விக்கெட்டுக்களையும், Ravindra Jadeja 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியில் முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 462 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய இந்திய அணி 178 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular