HomeTop newsமும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட்

2027ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவலின்படி, அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜெயவர்தனேவுக்குப் பதிலாக பொல்லார்ட் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பொல்லார்ட், தற்போது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 13 ஐபிஎல் பருவங்களில் வீரராக விளையாடியுள்ள பொல்லார்ட், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார். இதன் மூலம், அந்த அணியுடனான தனது நீண்டகாலத் தொடர்பை அவர் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.

இதற்கிடையில், மஹேல ஜெயவர்தனே ஒக்டோபர் 17ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகியதாகக் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயிற்சிக் காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் சம்பியன் பட்டங்களை வென்றது.

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளேஓஃப் சுற்றுக்குத் தகுதிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2026ஆம் ஆண்டு தொடரில் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அணியின் தயாரிப்புப் பணிகளையும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் பொறுப்பு பொல்லார்டிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular