2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்குரிய செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பரீட்சைப் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் (Admission Cards) மற்றும் நேர அட்டவணைகள் உரிய அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் முகவரிக்குச் செல்வதன் மூலமும் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலைத்தேய சங்கீதப் பாடத்திற்கான கேட்டற் பரீட்சை (Listening Test) நவம்பர் மாதம் 01 ஆம் திகதி அப்பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களிலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
