Homeஉலகம்ஜோர்டானில் தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு

ஜோர்டானில் தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு

ஜோர்டான் தலைநகர் அமானில் இருந்து தெற்குப் பகுதியில் 180 கி.மீ. தொலைவில் கராக் (Karak) என்ற பகுதி உள்ளது. இங்கு கிரேக்க மரவு வழி தேவாலயம் ஒன்ற உள்ளது. இந்த தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், தேவாலயத்தில் இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன, இதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம், அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. பொலிஸாரின் விசாரணைக்குப் பின்னரே சம்பவத்தின் முழுமையான பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular