சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு சந்தேகநபர்களும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
