HomeTop newsஎல்-நினோ தாக்கத்தை சமாளிக்க 160 மெகாவோட் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் இணைக்க திட்டம்

எல்-நினோ தாக்கத்தை சமாளிக்க 160 மெகாவோட் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் இணைக்க திட்டம்

நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் மின்சார உற்பத்தியில் ஏதேனும் தாக்கம் ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக, மின்கல சக்தி சேமிப்பு அமைப்பின் (Battery Energy Storage System) மூலம் அதிக அளவிலான மின்சாரத்தை மின்கட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக 160 மெகாவோட் மின்சாரத்தை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இவ்வாறு மின்கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ் அமைப்பின் மூலம் செப்டம்பர் மாதத்தில் 130 மெகாவோட் மின்சாரத்தையும், அக்டோபர் மாதத்தில் 10 மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மன்னார் காற்றாலை மின்நிலையம் தொடர்பான பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடிந்தால், மேலும் 50 மெகாவோட் மின்சாரத்தைத் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் அநுர கருணாதிலக்க வலியுறுத்தினார்.

இதேவேளை, மின்கல (Battery) அமைப்பின் மூலம் 250 மெகாவோட் மற்றும் 150 மெகாவோட் மின்சாரத்தைத் தேசிய மின்கட்டமைப்பில் சேர்ப்பதன் மூலம் எல்-நினோ நிலைமையை எதிர்கொண்டு மின் உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular