HomeTop newsநாமல் மீண்டும் விளக்கமறியலில்

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

எயார்பஸ் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினமும் சந்தேகநபரைச் சிறைச்சாலை அதிகாரிகளினூடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular