HomeTop newsநாமலின் பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி

நாமலின் பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை விண்ணப்பம் மீதான உத்தரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்.

கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ‘ட்ரான்ஸ்வேர்க்’ (Transworks) சதுக்க நிலத்தை பன்முகத் திட்டத்துக்காக கிரிஷ் நிறுவனத்துக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, 100 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular