அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரை நீடிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தரப்பில் இருந்து இந்தக் கருத்து வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தேவையான காலம் வரை போராடத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் போரின் தாக்கம் நீடிக்கும் சாத்தியம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்துள்ளன.
