HomeTop newsஜூலை மாத VAT-ஐ ஓகஸ்ட் 20க்குள் செலுத்துமாறு அறிவிப்பு

ஜூலை மாத VAT-ஐ ஓகஸ்ட் 20க்குள் செலுத்துமாறு அறிவிப்பு

2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

குறித்த வரியை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

காசோலை, வங்கி வரைவோலை அல்லது கட்டளைப் பத்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் உரிய திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெற்றால், அவை தாமதமான கொடுப்பனவுகளாகவே கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியையும் (Social Security Contribution Levy) ஓகஸ்ட் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular