Homeஉள்நாடுஇலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு - 91,059 பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு – 91,059 பேர் பாதிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதோடு, அங்கு 19,406 நோயாளர்கள் (21.31%) பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்களும் (19.88%), கண்டி மாவட்டத்தில் 6,491 நோயாளர்களும் (7.13%) இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,971 ஆகும்.

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 5,714 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 119 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாகச் சுகாதாரப் பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular