Homeவிளையாட்டுபிளே-ஆப் கனவில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து நேரும் பின்னடைவுகள்

பிளே-ஆப் கனவில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து நேரும் பின்னடைவுகள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், CSK அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வலது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் மேலதிக சிகிச்சைக்காக லண்டன் திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது விலகல் அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ஜேமி ஓவர்டன் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் எடுத்ததுடன், 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது ஆல்-ரவுண்டர் செயல்திறன் அணியின் சமநிலைக்கு முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular