Homeவிளையாட்டுநம்பர்-1 இடத்தை விட்டுக் கொடுக்காத பும்ரா

நம்பர்-1 இடத்தை விட்டுக் கொடுக்காத பும்ரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படையிலான புதிய வீரர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் Jasprit Bumrah 879 புள்ளிகளுடன் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் Mitchell Starc 838 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் நியூசிலாந்து வீரர் Matt Henry 836 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், ஆஸ்திரேலிய கேப்டன் Pat Cummins 832 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் நமன் அலி 825 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியைப் பொருத்தவரை, Mohammed Siraj 12-வது இடத்தில் உள்ளார். அதேபோல் Ravindra Jadeja 14-வது இடத்திலும், Kuldeep Yadav 15-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular