கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (10) மீண்டும் 22,000 புள்ளிகள் என்ற மைல்கல்லைக் கடந்தது.
2026 ஜூலை 6 ஆம் திகதிக்குப் பிறகு இந்த நிலையைச் சுட்டெண் எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான ஏற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ASPI சுட்டெண் 592.02 புள்ளிகள் உயர்ந்து 22,123.39 ஆக நிறைவடைந்தது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.95 பில்லியன்களாக பதிவாகியுள்ளது.
