HomeTop newsஇலங்கைக்கு எதிராக 434 ஓட்டங்களைக் குவித்த பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிராக 434 ஓட்டங்களைக் குவித்த பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்று தனது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய அஸான் அவாய்ஸ் (Azan Awais) 30 ஓட்டங்களையும், தையப் ஆரிஃப் (Tayyab Arif) 57 ஓட்டங்களையும் பெற்று நல்ல தொடக்கத்தை வழங்கினர்.

தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் தாஹா (51 ஓட்டங்கள்) மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் (50 ஓட்டங்கள்) அரைசதங்கள் அடித்து அசத்தினர்.

மத்திய வரிசையில் பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுத் ஷகீல் (Saud Shakeel) 93 ஓட்டங்களைக் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய அராபத் மின்ஹாஸ் (Arafat Minhas) 52 ஓட்டங்களையும், காசி கோரி (Ghazi Ghori) 48 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இறுதியில் 106.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இரண்டாவது நாளான இன்று பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அசித பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லஹிரு குமார மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular