Homeஉலகம்முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் மருத்துவமனையில்

முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் மருத்துவமனையில்

மலேசியாவின் முன்னாள் பிரதமரும், நவீன மலேசியாவின் சிற்பி என அழைக்கப்படுபவருமான மகாதிர் முகமது, தனது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது அலியின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

101 வயதான மகாதிர் முகமது, மனைவியின் மறைவால் ஏற்பட்ட கடும் மனவேதனையைத் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரான சித்தி ஹாஸ்மா, செப்டெம்பர் 28ஆம் திகதி தனது 100ஆவது வயதில் தேசிய இதய சிகிச்சை மையத்தில் காலமானார். கடந்த ஆகஸ்ட் மாதமே இருவரும் தமது 70ஆவது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியிருந்தனர்.

மனைவியின் இறுதிச்சடங்கில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மகாதிர் முகமது கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், மனைவியின் மறைவால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு மத்தியில் செப்டெம்பர் 29ஆம் திகதி மகாதிர் முகமதுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதிர் முகமதுவின் உடல்நிலை தொடர்பில் அவரது மகன் மொக்சானி மகாதிர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்கள் தந்தைக்கு மிகுந்த மன அழுத்தம் நிறைந்ததாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் மொக்சானி மகாதிர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular