Homeவெளிநாடுவங்கதேசத்தில் வன்முறை தீவிரம் - முகமது யூனுஸின் பூர்வீக வீட்டுக்குத் தீ வைப்பு

வங்கதேசத்தில் வன்முறை தீவிரம் – முகமது யூனுஸின் பூர்வீக வீட்டுக்குத் தீ வைப்பு

வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியினரின் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸின் பூர்வீக வீட்டின் ஒரு பகுதிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியினர் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், சாலை மறியல், பேரணி மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தின் போது யூனுஸின் பூர்வீக வீட்டின் தரைத்தள அறைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும், பொலிஸார் உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், அவரது சகோதரர்களின் குடும்பத்தினர் காயமின்றித் தப்பியுள்ளனர்.

இதேவேளை, முகமது யூனுஸ் நிறுவிய கிராமீன் வங்கியின் கிளைகள் மீதும் அண்மைக்காலமாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்து நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மான், அவாமி லீக் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular