Homeவெளிநாடுட்ரம்ப், புடின், சீ ஜின்பிங் பங்கேற்ற முத்தரப்புச் சந்திப்பு!

ட்ரம்ப், புடின், சீ ஜின்பிங் பங்கேற்ற முத்தரப்புச் சந்திப்பு!

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்புச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற ‘கிலின் வில்லா’ (Kylin Villa) வளாகத்தில் மூன்று நாட்டு தலைவர்களும் ஒன்றாகத் தோன்றியுள்ளனர்.

இதன்போது, பிரதான கூட்ட அறைக்குச் செல்வதற்கு முன்னதாக தத்தமது நாடுகளின் தேசியக் கொடிகளுக்கு முன்னால் மூன்று தலைவர்களும் உத்தியோகபூர்வ புகைப்படத்திற்காகத் தோற்றியுள்ளனர்.

எனினும், புகைப்படம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மூன்று தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பை முக்கிய இராஜதந்திர மைல்கல்லாகக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மிக உயர்மட்டத்தில் ஒன்றாகச் சந்திப்பது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார்.

“சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் நாட்டுத் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை. இது முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் வாய்ந்தது” என சீன அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua), சீ ஜின்பிங்கை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், முத்தரப்புச் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்புச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular