2026ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (உள்நாட்டு மொழிகள்) பரீட்சை எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணையை www.moj.gov.lk என்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை சிங்களம் – ஆங்கிலம் மற்றும் சிங்களம் – தமிழ் ஆகிய மொழிப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்காகவே இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
