இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் இந்த மாத இறுதிக்குள் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஏழாவது மீளாய்வின் கீழ் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில், ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை 0.25 சதவீதத்தால் அதிகரித்து 9 சதவீதமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள், உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை உள்நாட்டுப் பணவீக்க அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாணயக் கொள்கை மேலும் இறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
