Homeஉள்நாடு2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை 6.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை ஏழு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறுகின்றது.

இதனையடுத்து, மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் நாளை (21) முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular