Homeஉலகம்மக்காவை நோக்கி ஹூதி ஆளில்லா விமானத் தாக்குதல்? சவூதி படைகள் முறியடித்ததாக தகவல்

மக்காவை நோக்கி ஹூதி ஆளில்லா விமானத் தாக்குதல்? சவூதி படைகள் முறியடித்ததாக தகவல்

சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஹூதி போராளிகளால் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த ஆளில்லா விமானத்தை சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் வானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் முக்கிய புனித நகரங்களில் ஒன்றான மெக்காவில், இஸ்லாமியர்களின் புனிதத் தலமான கஃபா அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுக்காக மெக்காவுக்கு வருகை தருகின்றனர்.

யேமனில் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி இயக்கத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. ஹூதி இயக்கம் ஷியா இஸ்லாத்தின் சைதி பிரிவுடன் தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுகிறது.

இந்த மோதல் பிராந்திய அளவில் பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவும் யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்துள்ளது. ஹூதி இயக்கத்துக்கு ஈரான் ஆதரவளிப்பதாக சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மெக்காவை நோக்கி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்கள், புனித யாத்திரை மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் நிலையில், தாக்குதலின் இலக்கு மற்றும் அதற்குப் பின்னால் இருந்த தரப்பு தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular