கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சொனால் தினுஷ சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற உலக டெஸ்ட் சேம்பியன்ஸிப் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை அவர் வௌிப்படுத்தியிருந்தார்.
இதனடிப்படையிலேயே அவர் ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஓலி ரொபின்சன் மற்றும் பங்களாதேஷின் ஹசன் மஹ்மூத் ஆகியோர் ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் இவ்விருதைப் தினுஷ பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை விளாசினார்.
இதில் இரண்டாவது போட்டியில் அவர் பெற்ற இரட்டைச் சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
