இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.32 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.69 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வெளிநாட்டு நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் டொலரின் கொடுக்கல் – வழங்கல் நிலைமைகளின் தாக்கத்தால் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
