HomeTop newsபோக்குவரத்து அபராதம் செலுத்துமாறு போலி குறுஞ்செய்தி - மோசடி வலையில் சிக்க வேண்டாம்

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு போலி குறுஞ்செய்தி – மோசடி வலையில் சிக்க வேண்டாம்

GovPay என்ற பெயரில் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் பொதுமக்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி, பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த குறுஞ்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள GovPay இணைப்பு முற்றிலும் போலியானது எனவும், இணையவழி மோசடியில் ஈடுபடுவதற்காக அது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அபராதங்களைச் செலுத்துமாறு கோரி GovPay உத்தியோகபூர்வ தளத்தின் ஊடாக அமைச்சோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறுஞ்செய்திகள் அல்லது அறிவிப்புகளை அனுப்புவதில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி இணைப்புகள் ஊடாக பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, இத்தகைய சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது அவற்றில் உள்ள இணைப்புகளைத் திறக்கவோ வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கம் அல்லது சட்ட அமுலாக்க நிறுவனங்களின் பெயரில் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது gov.lk எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular