Homeஉள்நாடுஇலங்கையில் மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் (Hypertension) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நோய்களினால் ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாததால், இது “நிசப்தக் கொலையாளி” என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களது இரத்த அழுத்தத்தை முறையாக பரிசோதித்து வர வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையர்களிடையே அதிகளவில் உப்புச் சேர்த்த உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி குறைவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவும் இந்த நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular