HomeTop newsகிழங்கு மற்றும் காய்கறிப் பயிர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டம்

கிழங்கு மற்றும் காய்கறிப் பயிர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டம்

கிழங்கு மற்றும் காய்கறிப் பயிர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயிகளுக்கான காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்கீழ் மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், கத்தரி, வெண்டைக்காய், போஞ்சி, கறி மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்ச் செய்கைகள் இந்தக் காப்புறுதித் திட்டத்திற்குள் அடங்குவதாக விவசாய மற்றும் விவசாயிகளுக்கான காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

அடிப்படை காப்புறுதித் தொகையில் 7% மட்டுமே தவணைக்கட்டணமாகச் செலுத்தி இக்காப்புறுதிச் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் இயற்கை அனர்த்தங்கள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்கள், வன யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

அபாயங்களை மேலாண்மை செய்வதன் மூலம் விவசாயிகளைத் தொடர்ந்து பயிர்ச் செய்கையில் ஈடுபட வைப்பதே இக்காப்புறுதித் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என விவசாய மற்றும் விவசாயிகளுக்கான காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular