எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகவுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் Nishantha Jayawera விளக்கமளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப வரிக் கொள்கையை எளிமைப்படுத்தும் நோக்கில் இதுவரை தனித்தனியாக அறவிடப்பட்டு வந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட்ட 18% VAT மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவை இணைக்கப்பட்டு, ஜூலை 1 முதல் 20.5% ஆக அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதே நாளில் இருந்து சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தனியாக அறவிடப்படமாட்டாது என்றும், இனிவரும் காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரி என இரு தனி வரிகள் விதிக்கப்படமாட்டாது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
