HomeTop newsசிறு தொழில்களுக்கு ஆபத்தா? - அரசின் புதிய வரித் திட்டத்திற்கு சஜித் கடும் எதிர்ப்பு

சிறு தொழில்களுக்கு ஆபத்தா? – அரசின் புதிய வரித் திட்டத்திற்கு சஜித் கடும் எதிர்ப்பு

அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, ஜூலை 1ஆம் திகதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் போன்றவற்றை அரசாங்கம் ஒரே நேரத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய வரி மாற்றங்களின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதோடு, நிதிச் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரமும் பெறுமதிசேர்வரி முறையில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த இணக்கப்பாட்டு கடமைகள் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் வெறும் சீர்திருத்தங்கள் அல்ல, மாறாக பொருளாதாரத்தை நசுக்கும் “பறிப்பு” என அவர் விமர்சித்துள்ளார். அதிக வரிவிதிப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், வணிகங்கள் சீராக இயங்குவதற்கும் இடமளிக்க வேண்டும்; இல்லையெனில் இறுதியில் வரி வசூலிக்க கூட எதுவும் எஞ்சியிருக்காது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular