HomeTop newsகடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா - நோர்ட்டன் பகுதியில் பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா – நோர்ட்டன் பகுதியில் பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா – நோர்ட்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (03) காலை 8.30 மணி முதல் இன்று (04) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் கெனியன் பகுதியில் 234.6 மி.மீ., லக்ஷபானவில் 208 மி.மீ., காசல்ரீயில் 164 மி.மீ., மாவுஸ்ஸாக்கலை பகுதியில் 125 மி.மீ., மேல் கொத்மலையில் 110.3 மி.மீ. மற்றும் கொத்மலை பகுதியில் 105 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular