Homeசெய்திசென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 37 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

சி.எஸ்.கே. அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எனவே, சிஎஸ்கே அணிக்கு எஞ்சிய அனைத்துப் போட்டிகளும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று களமிறங்குகிறது. கடைசியாக நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் அவ்வணி தோல்வி அடைந்துள்ளது.

அதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular