HomeTop newsஇந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் நிலநடுக்கம்

இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் நிலநடுக்கம்

மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகளை அண்மித்த இந்து சமுத்திரப் பகுதியில் இன்று (24) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பிற்பகல் 4.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நிலைமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular