HomeTop newsதிங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டம்

திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை (30) அனைத்து ஆசிரியர்களும் உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படாததை எதிர்த்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அன்றைய தினம் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular