இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுக்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.
மொத்தக் கடன் தொகையில் 24 மில்லியன் டொலர் பொது மூலதன ஆதாரங்களிலிருந்தும், 6 மில்லியன் டொலர் சிறப்பு மூலதன ஆதாரங்களிலிருந்தும் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை அடிப்படையிலான நிதி உதவிக்கு இணையாக இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.
