Homeஉள்நாடுவெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சலுகை

வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சலுகை

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் (ETA) வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணினிக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தகுதியுடைய வெளிநாட்டுப் பயணிகள் முன்கூட்டியே ETA பெற்றுக்கொள்ளாமல் விமானங்களில் பயணிக்கத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையை வந்தடைந்த பின்னர் விமான நிலையத்தில் ETA அல்லது சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை விசா தேவைகளை முழுமையாக நீக்காது என்றும், வழமையான குடிவரவுப் பரிசோதனைகள் தொடரும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular