Homeவிளையாட்டுவைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் இந்தியா 'ஏ' அணி வெற்றி

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தொடரில், ஐக்கிய அரபு இராச்சிய அணியை இந்தியா ‘ஏ’ அணி 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளது.

தோஹாவில் இன்று (24) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. ஹர்பிரீத் சிங் 130 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா ‘ஏ’ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ஓட்டங்களை விளாசி சாதனைமிகு அதிரடியை வெளிப்படுத்தினார்.

அவரது இன்னிங்ஸில் 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கியிருந்ததுடன், வெறும் 28 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் இந்தியா ‘ஏ’ அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular