கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவித்த பின்னர் விளையாடிய முதலாவது போட்டியில் போர்த்துக்கல் அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
தேசங்களுக்கான லீக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) சொந்த மண்ணில் நடைபெற்ற குழு ஏ4 போட்டியில் டென்மார்க்கை எதிர்கொண்ட போர்த்துக்கல் அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ரொனால்டோவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போர்த்துக்கல் வீரர்கள் அனைவரும் 7ஆம் இலக்க சீருடையை அணிந்து களமிறங்கினர்.
அதேவேளை, அரங்கில் இரசிகர்கள் ரொனால்டோவின் சாதனைகளைப் பாராட்டும் பதாதைகளையும் காட்சிப்படுத்தினர். குறிப்பாக, ‘நன்றி அணித்தலைவரே’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
போட்டியின் ஏழாவது நிமிடத்தில் ரொனால்டோவுக்கான காணொளி மற்றும் பாராட்டு நிகழ்வுகளும் திரையில் ஒளிபரப்பப்பட்டன.
இதற்கிடையில், ரொனால்டோவின் 7ஆம் இலக்க சீருடை கார்லோஸ் போர்ப்ஸுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
