HomeTop newsஇலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை

இலங்கை பொலிஸாருக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீருடை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சாம்பல் நிற மேற்சட்டை மற்றும் நீல நிற முழுநீளக் காற்சட்டையைக் கொண்ட கனேடிய பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்பும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

பொலிஸாருக்கான புதிய சீருடையை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான வடிவமைப்புகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

பொலிஸ் உள்ளகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கனேடிய பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்பும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எனினும், புதிய சீருடையின் இறுதி வடிவமைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிமுகம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular