HomeTop newsலாஃப்ஸ் எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (16) பிற்பகலுக்குள் வெளியிடப்படும் என நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நிறுவன அதிகாரிகள் குழுவினர் நுகர்வோர் விவகார அதிகார சபைக்குச் சென்றபோது, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக விசாரணை நடத்த நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்த அழைப்பின் பேரில், நிறுவனப் பிரதிநிதிகள் இன்று காலை சுமார் 10 மணியளவில் அங்கு முன்னிலையாகினர்.

இதற்கிடையில், கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாவாகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் வெளியாகவுள்ள விலைக் குறைப்பு அறிவிப்பு தொடர்பில் நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular