HomeTop newsஅமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை - எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயார்

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயார்

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும் அல்லது மீண்டும் போரைத் தொடர்ந்தாலும், அதனை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்கா முன்வைத்துள்ள அணுகுமுறைக்கு ஈரான் அஞ்சப்போவதில்லை என்றும், தமது நாடு முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியதுடன், ஹார்முஸ் நீரிணையையும் மூடியது. இதனால் சர்வதேச எரிசக்திச் சந்தையிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதற்கிடையில், ஈரான் மீது அடுத்தகட்ட இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சவுதி அரேபியா மற்றும் துருக்கி தலைவர்களும் ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தவிர்க்குமாறு டிரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகளும் ஈரானின் பதிலடி எச்சரிக்கையும் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular