HomeTop newsகோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் உறுதி

கோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் உறுதி

பண்டிகைக் காலத்தில் கோழிக்கறிக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சந்தைக்கு போதியளவு விநியோகிப்பதுடன், அதன் விலையையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு முட்டை மற்றும் கோழிக்கறியைத் தடையின்றி வழங்குவது தொடர்பில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் இன்று (23) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலந்திரராஜ, மேலதிக செயலாளர் கில்மா தஹநாயக்க, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், முட்டை மற்றும் கோழிக்கறி வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular