2027 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் சம்பளங்கள் 61.38% முதல் 77.80% வரை அதிகரிக்கவுள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக 41,810 ரூபாயும், அதிபர்களுக்கு 45,395 ரூபாயும் சம்பள அதிகரிப்பு கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவையும் கோரியுள்ளனர்.
இதேவேளை, ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளும் அரசாங்கத்தின் முன்மொழிவுகளும் தொடர்பான விவாதம் கல்வித்துறையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
