HomeTop newsஅரச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதிக்கலாம்? அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதிக்கலாம்? அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (23) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சுமார் 40 சதவீத முன்மொழிவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், உர மானியப் பிரச்சினைகளால் விவசாயம் மற்றும் தேயிலைத் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு மற்றும் நலத்திட்ட உதவிகள் குறைப்பு காரணமாக மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் இடம்பெறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular