ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறைகள் ஊடாக மேற்கொள்ளத் தவறினால், கூடுதல் வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நிலம், சொத்துக்கள், வாகனங்கள் கொள்வனவு மற்றும் விற்பனை உள்ளிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு மாறாக ரொக்கமாகச் செலுத்தப்படும் வணிகச் செலவுகள் வரிக் கணக்கீட்டின்போது கழிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்.
இதனால், உண்மையான இலாபத்தை விட அதிக தொகைக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ரூ.5 இலட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறைகளைப் பின்பற்றுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
