இந்திய நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்துக்கு எதிராக சிம்லா பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தினரை விமர்சித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த பதிவுகள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சிம்லாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அதுல் சர்மா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 196, 353 மற்றும் 356 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிம்லா பொலிஸ் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
