HomeTop newsயானை - மனித மோதலைத் தடுக்க AI தொழில்நுட்பம் - கல்கமுவில் ஆரம்பகட்ட ஆய்வு

யானை – மனித மோதலைத் தடுக்க AI தொழில்நுட்பம் – கல்கமுவில் ஆரம்பகட்ட ஆய்வு

நாட்டில் நிலவும் யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடலும் கள ஆய்வும் நேற்று (13) கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் ‘ஹுவாவே’ (Huawei) நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சீனாவில் யானை – மனித மோதல் நிலவிய பிரதேசங்களில் இவ்வாறான முன்னெச்சரிக்கை கட்டமைப்புகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சீனத் தூதுவரும் ஹுவாவே நிறுவனப் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டினர்.

காட்டு யானைகளின் உடல் அளவு மற்றும் நடமாட்ட முறைகளை அடையாளம் காணக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கெமரா கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு, எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாகப் பிரதேசவாசிகளை அறிவுறுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது.

இந்தக் கள ஆய்வின்போது இலங்கையின் புவியியல் அமைப்பு, காட்டு யானைகளின் இடப்பெயர்வு முறைகள், அவை கிராமங்களுக்குள் நுழையும் பாதைகள் மற்றும் கெமரா கட்டமைப்புகளை நிறுவுவதற்குப் பொருத்தமான இடங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களையும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளையும் இலங்கையின் சூழலியல் மற்றும் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்தக் கள ஆய்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular