நாளை நள்ளிரவு முதல் சிற்றுண்டிகள் மற்றும் உணவுப் பொட்டலங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய, நாளை நள்ளிரவு முதல் ஒரு சிற்றுண்டியின் விலை 5 ரூபாயாலும், ஒரு உணவுப் பொட்டலத்தின் விலை 15 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படவுள்ளதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவகங்களின் செயற்பாட்டுச் செலவுகள் உயர்ந்துள்ளமையே இந்த விலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
