HomeTop newsநுவரெலியா - தலவாக்கலை வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா – தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட்  பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) முற்பகல் 11.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுடன் நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும், எதிர் திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தொன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular