Homeசினிமாசூர்யா - நயன்தாரா நேருக்கு நேர் - ஒரே நாளில் வெளியான ‘சீன்’, ‘மூக்குத்தி அம்மன்...

சூர்யா – நயன்தாரா நேருக்கு நேர் – ஒரே நாளில் வெளியான ‘சீன்’, ‘மூக்குத்தி அம்மன் 2’

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், தினமும் ஆறு காட்சிகள் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை திரைப்படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய திரைப்படங்கள் இன்று (06) தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்ரியா கதாநாயகியாகவும், நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

அதேவேளை, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் இன்று காலை 6 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் அதிகாலை 6 மணி திரைப்படக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் திரையரங்குகள் முன்பாக உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் நயன்தாராவின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால், இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதிலும் திரையரங்குகளில் வசூல் சாதனை படைப்பதிலும் எந்தத் திரைப்படம் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular