HomeTop newsஇந்த ஆண்டு 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் பயணம்

இந்த ஆண்டு 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் பயணம்

இந்த வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மொத்தம் 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

உணவகம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு (Housekeeping), உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மற்றுமொரு குழுவாக 261 இலங்கையர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் புறப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு புறப்படவுள்ள தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நேற்று (13) பணியகத்தின் கேட்போர் கூடத்தில், பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 158 பேர் உணவகத் துறை சார்ந்த பணிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய 103 பேர் ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் பணியாற்ற தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, அரச மற்றும் தனியார் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக இதுவரை மொத்தமாக 14,349 இலங்கையர்கள் இஸ்ரேலின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular